Advertisement

டூவீலரில் கார் மோதி விபத்து ! தந்தை மகன் பரிதாப பலி !

திருப்பூர் தாராபுரம் மாந்தியாபுரத்தைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து வயது 50. மகன் செல்வராஜ் வயது 35. மனைவி 2 குழந்தைகள் உள்ளனர். தந்தை மகன் இருவரும் மரம் வெட்டும் கூலி தொழிலாளிகள். இருவரும் வேலைக்கு டூவீலரில் குள்ளம்புதூர் சென்றனர். காங்கேயம் பிரிவில் மதுரை - கோவை தேசிய நெடுஞ்சாலையை கடந்தனர். அவ்வழியாக கோவையிலிருந்து - மதுரை நோக்கி சென்ற கார் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு தந்தை நாச்சிமுத்து பலியானார். மகன் செல்வராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கார் ஓட்டி வந்த மதுரை பொறியாளர் மணிவண்ணன் மற்றும் மனைவி காயமடைந்தனர் காரில் இருந்த 2 குழந்தைகளுக்கு பாதிப்பு இல்லை. தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement