Advertisement

ரூ.6 கோடி திமிங்கில எச்சம் பறிமுதல்: மூவர் பேர் கைது

திருவாரூர் மாவட்ட வன அலுவலர் அறிவொளி தலைமையில் வனத்துறையினர் அம்மையப்பன் பகுதியில் வாகன சோதனை செய்தனர். அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தினர். ஆட்டோவில் சந்தேகப்படும் படி நான்கு பேர் இருந்தனர். அதில் ஐந்தரை கிலோ திமிங்கிலம் எச்சம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. தப்பி ஓட முயன்ற திருச்சியை சேர்ந்த சுரேஷ், நாகப்பட்டினத்தை சேர்ந்த வேல்முருகன், திருவாரூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மூவரையும் கைது செய்தனர். ஒருவர் தப்பி ஓடினார். 6 கோடி ரூபாய் சந்தை மதிப்புடைய திமிங்கில எச்சத்தை வெளிநாட்டுக்கு கடத்துவதற்கு நாகப்பட்டணத்திற்கு எடுத்து சென்றது விசாரணையில் தெரிந்தது. தப்பி ஓடிய நபரை தேடுகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement