Advertisement

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் கூடுதல் மதிப்பெண்!

CBSE பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதில் மதுரை அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் (KRS) CBSE பள்ளி உட்பட பெரும்பாலான CBSE பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றன. மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வை 30 பள்ளிகளை சேர்ந்த 3,500 மாணவர்கள் மற்றும் பிளஸ் 2 தேர்வை 20 பள்ளிகளை சேர்ந்த 3,791 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் KRS CBSE, வேலம்மாள், அதியபனா, குயின் மீரா இன்டர்நேஷனல், மகாத்மா, மதுரை பப்ளிக் பள்ளி உட்பட பெரும்பாலான பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றன. ப்ளஸ் 2 வில் KRS CBSE பள்ளி மாணவர்கள் அகிலேஷ் 500 மதிப்பெண்ணுக்கு 464, முத்து நமாஸ் 445, ஆதர்ஷ்குமார் 436 மதிப்பெண் பெற்றனர். பத்தாம் வகுப்பில் 500 மதிப்பெண்ணுக்கு மாணவிகள் நவிதா 483, வர்ஷிகா 480, ஜோத்சனா 471 மதிப்பெண் பெற்றனர். ஜோத்சனா தமிழ், நவிதா சமூக அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். ப்ளஸ் 2 வில் வேலம்மாள் பள்ளி மாணவர் ஜான் அபிேஷக் 491, மாணவி மகாலட்சுமி 490 பெற்றனர். பத்தாம் வகுப்பில் மகாத்மா பள்ளி மாணவி மீனாட்சி 491, வேலம்மாள் பள்ளி மாணவர் சஞ்சய் குமரன் 490 மதிப்பெண் பெற்றனர். பிளஸ் 2வில் நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி வைஷாலி 478, பத்தாம் வகுப்பில் நெகலா மீரான் 476 மதிப்பெண்கள் பெற்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement