Advertisement

விளம்பர பலகைகள் அகற்றம் கோவை மாநகராட்சி அதிரடி

கோவை ப்ரூக் பீல்ட்ஸ் ரோட்டில், ரயில்வே தண்டவாள பகுதியில், வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளை, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கிழித்தெறிந்தனர். வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையிலும், விபத்தை ஏற்படுத்தும் வகையிலும், விளம்பர பலகைகள் வைக்கக்கூடாதென, ஐகோர்ட் உத்தரவிட்டது; தமிழக அரசும் இதை வலியுறுத்தியது. இதனை மீறி, கோவையில் விளம்பர பலகைகள் அமைக்கப்பட்டன. இவற்றை அகற்ற, கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் உத்தரவிட்டனர். அதன்படி, மாநகராட்சி எல்லைக்குள் உள்ள விளம்பர பலகைகளை நகரமைப்பு பிரிவினர் அகற்றி வருகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement