Advertisement

சாலைகளை அழகு செய்யும் தூங்குமூஞ்சிகள் மரங்கள்

கோவை மாநகர சாலையோரங்களில் அதிகம் காணப்படும் மரங்களில் ஒன்று துாங்குமூஞ்சி மரம். அழகிய மலர்களுடன் குடை விரித்தாற்போல தோற்றமளிக்கும் இந்த மரம், பகலில் மட்டுமின்றி, இரவிலும் ஆக்சிஜன் வெளியேற்றும் தன்மை கொண்டவை. மத்திய மற்றும் தென் அமெரிக்காவை தாயகமாக கொண்ட துாங்குமூஞ்சி மரம், அதன் சின்னஞ் சிறு மலர்களின் அழகால் உலகெங்கும் பரவி விட்டது. இலைகள் மூடியபடி இருப்பதால், இதற்கு துாங்குமூஞ்சி என்ற பெயர் நிலைத்து விட்டது. பகல் நேரத்தில் மழைநீரை தன் இலைகளில் சேமித்து வைக்கும் இந்த மரம், இரவு நேரத்தில் அதை விடுவிக்கிறது. இதனால் இந்த மரத்தடியில் சென்றால், மழை பெய்வது போலவே இருக்கும். இதுவே இந்த மரத்துக்கு, 'ரெயின் ட்ரீ' அல்லது மழை மரம் என்ற பெயர் வந்ததற்கு காரணமாகும் வேர் உறுதியற்ற மரம் என்பதால் மழை, காற்று காலங்களில் இந்த மரத்தின் அருகிலோ அடியிலோ இருப்பது ஆபத்து என்று கூறுகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement