Advertisement

கோவையில் செவிலியர் தின கொண்டாட்டம்

ஆண்டுதோறும் மே 12ம் தேதிசர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் செவிலியர்களை கவுரவிக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கோவையில் செவிலியர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நோயாளிகளை கனிவுடன் கவனிப்போம் என உறுதி மொழி எடுத்தனர். நிகழ்ச்சியில், மருத்துவமனை டீன் நிர்மலா நைட்டிங்கோல் படத்திற்கு மரியாதை செலுத்தினார். இதில், 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர். கோவை செவிலியர் பயிற்சி பள்ளியில் நடந்த விழானில் முதல்வர் சரளா தங்கராஜ், செவிலியர் ஆசிரியர்கள், மாணவிகள், செவிலியர் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement