Advertisement

ஜார்கண்ட்டை சேர்ந்த இருவர் கைது

புதுச்சேரியை சேர்ந்தவர் கிருஷ்ணா சர்மா. ஜிப்மரில் செக்யூரிட்டியாக உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் குறைந்த விலையில் துணி வாங்க ஆன் லைன் ஷாப்பிங் ஆப் மீஷோவில் தேடினார். குறைந்த விலையில் துணிகள் விற்பதாக அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு ஆன்லைன் லிங்க் வந்தது, அதன் மூலம் மற்றொரு ஆப்பை டவுன்லோடு செய்து பயன்படுத்தினார். அதன் மூலமாக மர்ம நபர்கள் கிருஷ்ணா சர்மா வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்து 75 ஆயிரத்து 997 ரூபாயை எடுத்தனர். சைபர் கிரைம் போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வந்தனர். கிருஷ்ணா சர்மாவின் வங்கி கணக்கில் இருந்து ஜார்கண்ட்டில் உள்ள வங்கி கணக்கிற்கு பணப்பரிமாற்றம் செய்ததை கண்டுபிடித்தனர். அந்த வங்கி கணக்கின் பயனாளரை கண்காணித்து வந்த போலீசார் சென்னை ஏர்போர்ட் பகுதியிலிருந்த ஜார்கண்ட்டை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அசாமுதின் அன்சாரி, மகேஷ் குமார் என்பது தெரிந்தது. மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து 35 ஆயிரத்தை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement