Advertisement

மின்சாரம் தாக்கி 4 யானைகள் பலி ! மின் வேலியில் சிக்கிய பரிதாபம் !

மின்சாரம் தாக்கி 4 யானைகள் பலி ! மின் வேலியில் சிக்கிய பரிதாபம் ! ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டம், பார்வதிபுரம் பகுதி வனப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட யானைகள் வசிக்கின்றன. அந்த யானைகள் உணவு, குடிதண்ணீர் ஆகியவற்றிற்காக அடிக்கடி அங்குள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் ஒடிசாவிலிருந்து வந்த 6 யானைகள் கொண்ட கும்பல் ஒன்று பார்வதிபுரம் அருகே உள்ள விளைநிலத்தில் புகுந்தது. அப்போது அங்கு தாழ்வாக இருந்த டிரான்ஸ்பார்மர் ஒன்றின் மின் கம்பி மீது யானைகள் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 4 யானைகள் பரிதாபமாக இறந்தன. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் 4 யானைகளை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மு.செ : 4 யானைகள் பலி ஆந்திராவில் விவசாய நிலத்திலுள்ள மின் வேலி மின்சாரம் தாக்கி 4 யானைகள் பலி ( சென்னை குரூப் )

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement