Advertisement

கிராவல் கொள்ளையர்களை பிடிக்க போலீசில் புகார்

தேனி மாவட்டம் பெரியகுளம் ஜெயமங்களத்தில் கல்லாங்குத்து அரசு தரிசு நிலத்தில் அனுமதி இல்லாமல் கிராவல் மண் வெட்டி கனிமவள கொள்ளை நடந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. கொள்ளை கும்பல் எல்லை மீறி 2300 கிலோ வாட் மின்சாரம் செல்லும் உயர் மின் அழுத்த கோபுரத்தைச் சுற்றி 35 அடி ஆழத்திற்கு கிராவல் மண்ணை வெட்டி எடுத்து சென்றது. தொடர்ச்சியாக மண் வெட்டி எடுத்ததால் உயர் மின்னழுத்த கோபுரம் சாய தொடங்கியது. இது குறித்து மின்வாரியத்திற்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆனந்தன் சாய்ந்து விழும் நிலையில் உள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தை ஆய்வு செய்தார். மண் வெட்டியவர்கள் மீது ஜெயமங்கலம் போலீசில் புகார் கூறினார். உயர் மின் அழுத்த கோபுரத்தை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்ப உள்ளதாக தெரிவித்தார். கிராவல் மண் அள்ளிய கும்பலை கைது செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement