Advertisement

சாலையை கடந்த யானைகள் வனத்துறையினர் விரட்டினர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் காட்டில் முகாமிட்டிருந்த 3 யானைகள் ஏணிமுச்சந்திரம், சீனிவாசபுரம், ஆலல்லி கிராமங்களில் விவசாய நிலங்களில் பயிர்களை நாசம் செய்தன. இன்று காலை ஆலல்லி பகுதியில் சுற்றி திரிந்த 3 யானைகளை தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர், அப்போது யானைகள் அஞ்செட்டி சாலையை கடந்து தாவரகரை காட்டிற்கு சென்றன. யானைகளை வனத்துறையினர் கண்காணித்து ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement