Advertisement

20 புல்லட் பறிமுதல் ஒருவர் கைது

தஞ்சை மாநகரம், வல்லம், ஒரத்தநாடு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புல்லட்டுகள் திருட்டு போவதாக புகார் வந்தது. தனிப்படையினர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தும், குறைந்த விலையில் புல்லட் விற்பவர்கள் குறித்தும் விசாரித்தனர், சில நாட்களுக்கு முன்பு திருடப்பட்ட புல்லட்டை ஒருவர் குறைந்த விலைக்கு விற்க முயன்ற போது போலீஸாரிடம் பிடிபட்டார். விசாரித்தபோது தஞ்சாவூர் பூக்கார தெருவைச் சேர்ந்த அரவிந்த் என்பதும் புல்லட்டை மட்டும் குறிவைத்து 4 பேர் சேர்ந்து திருடுவதாகவும், பதிவு எண்ணை மாற்றி, குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாகவும் தெரிந்தது. 40 லட்சம் மதிப்பிலான 20 புல்லட்டை பறிமுதல் செய்து திருட்டில் தொடர்புடைய அர்ஜூன், அரவிந்த், அலெக்ஸ் ஆகிய மூவரையும் தேடி வருகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement