Advertisement

ஒவ்வொரு மதுபாட்டிலிலும் ஊழல் நடந்தது எப்படி?

தமிழகத்தை போல சத்தீஸ்கரிலும் மது விற்பனை மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. மது விற்பனையில் மோசடி நடப்பதாக எழுந்த புகாரையடுத்து வருமான வரித்துறை, கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இதில் நடக்கும் பண மோசடி தொடர்பாக அமலாக்க துறையும் விசாரித்தது. மது ஆலை அதிபர் அன்பர் தேபார் கைது செய்யப்பட்டார். கடந்த 2019 முதல் மது விற்பனையில் மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கூறியது. மது விற்பதில் குறிப்பிட்ட அளவு கமிஷன் நிர்ணயித்து உள்ளனர். மொத்த மது விற்பனையில் 40 சதவீதம் வரை கணக்கில் காட்டாமல் மது விற்கப்பட்டுள்ளது. அதாவது, மது ஆலையில் இருந்து அரசு குடோனுக்கு செல்லாமல், நேரடியாக மதுக்கடைகளுக்கு அனுப்பப்படும். இந்த மதுவகைகளுக்கு வருமான வரி, கலால்வரி போன்றவை செலுத்த வேண்டியதில்லை. இதனால், அரசு கஜானாவுக்கு ஒரு பைசாகூட போகாது. மது ஆலைகளுக்கான பணம் கிடைத்து விடும். வரி ஏய்ப்பு, கூடுதல் விலை மூலம் கிடைக்கும் பணம், மோசடி கும்பலுக்கு செல்லும். இந்த வகையில் 2000 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர். ஒவ்வொரு மது பாட்டிலிலும் ஊழல் நடந்துள்ளது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement