Advertisement

விவசாயிகள் வேதனை

கடலூர் மாவட்டம் புவனகிரி அம்மன்குப்பம், சின்ன நற்குணம், எறும்பூர் கிராம எல்கைக்குள் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது சின்ன நற்குணம் ஏரி. பொதுப்பணித்துறையினர் பராமரிப்பு இல்லாததால் ஏரி தூர்ந்து வருகிறது. நாட்டு கருவேல மரங்கள் ஏரியை ஆக்கிரமித்துள்ளதால் ஏரி தன் அடையாளத்தை இழந்து வருகிறது. பகுதி விவசாயிகள் பல முறை கோரிக்கை வைத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்வில்லை. ஏரியில் உள்ள நாட்டு கருவேல மரங்களை அகற்றி தூர்வார வேண்டும், எரிக்குள்ளேயே புதிய சாலை அமைக்கும் பணியை கைவிட வேண்டும், பொதுப்பணித்துறையினர் ஏரியை அளவீடு செய்து எல்கை கல் நட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement