Advertisement

லாரியில் பைக் மோதியது 2 கல்லூரி மாணவர்கள் பலி

திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் தருண் சாஸ்தா வயது 21. கெச்சிணிபட்டியை சேர்ந்த சக்திவேல் மகன் சுராஜ் வயது 21. இருவரும் திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர். வியாழன் பிற்பகல் கல்லூரி விட்டதும் டூவீலரில் வீட்டுக்கு புறப்பட்டனர். சூடாமணிப்பட்டி பிரிவில் சென்றபோது முன்னால் சென்ற மணல் டிப்பர் லாரி திடீரென வலது புறம் திரும்பியது. இதனால் லாரியின் பின்புறத்தில் பைக் மோதியது. இருவரும் லாரியின் டயரில் சிக்கி இறந்தனர். தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement