Advertisement

தாளவாடியில் ஒரே நாளில் 3 இடங்களில் கொள்ளை

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே உள்ள ஒங்கன்புரம் கிராமத்தில் நேற்றிரவு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் இருந்த கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையர்கள் திருடி சென்றனர். அதேபோல் பீம்ராஜ்நகர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் உண்டியலையும் உடைத்து கொள்ளையர்கள் திருடி சென்றனர். ஒரே நாளில் இரண்டு கோவில்களின் உண்டியல்கள் திருட்டு போனதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நேற்றிரவு தாளவாடி அருகே டாஸ்மாக் கடை ஊழியர் சக்கரபாணி வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை கடையை திறந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கடையில் இருந்த ரூ. 15,000 மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு போனது தெரியவந்தது. ஒரே நாளில் 3 இடங்களில் கொள்ளை சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement