Advertisement

காஷ்மீரில் போலீஸ் வேட்டை 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் வனிகாம் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் பாதுகாப்புப் படையினர் வியாழன் அதிகாலை அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். இரு தரப்புக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஷாகிர் மஜித், ஹனன் அஹ்மத் என்ற இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் ஒரு மாதத்துக்கு முன்தான் லஷ்கர் இ தாய்பா இயக்கத்தில் சேர்ந்தனர் என போலீசார் தெரிவித்தனர். ஒரு ஏகே 47 ரக துப்பாக்கி, கைத்துப்பாக்கி, கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றியதாக ஏ.டி.ஜி.பி. விஜய்குமார் தெரிவித்தார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement