Advertisement

மதுரை மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தாலி கயிற்றை புதுப்பித்து கொண்ட பெண் பக்தர்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக துவங்கியது. கோயிலின் வடக்கு ஆடி வீதி மற்றும் மேற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள மண மடை வண்ண மலர்கள் மற்றும் வெட்டி வேர்களால் அலங்கரிக்கப்படிருந்தன. மண விழாவில் கலந்து கொள்வதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகன் தெய்வானை மற்றும் பவளக்கனிவாய் பெருமாள் மண மேடையில் எழுந்தருளினர். மீனாட்சியும் சொக்கரும் மணக்கோலத்தில் மண மேடையில் எழுந்தருளினர். வேதமந்திரங்கள் முழங்க கல்யாண வைபவம் தொடங்கியது. மீனாட்சி, சொக்கர் சுவாமிக்கு பட்டு வஸ்திரம் சாத்தப்பட்டது. அம்மன், சுவாமிக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் காலை 8.59 மணிக்கு கோலாகலமாக நடந்தது. பெண்கள் தங்களது திருமாங்கல்ய கயிற்றை புதிதாக மாற்றிக்கொண்டனர். கோயில் சார்பில் திருக்கல்யாண விருந்து நடைபெற்றது. திருக்கல்யாணத்தை காண கோயில் உள்ளேயும், சித்திரை வீதிகளிலும் எல்.இ.டி டிவிகள் வைக்கப்பட்டு இருந்தன. ஆடி வீதி மற்றும் சித்திரை வீதிகளில் மொய் காணிக்கை செலுத்த சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டிருந்தன. நாளை காலை கீழமாசி வீதியில் திருத்தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன் மற்றும் துணை கமிஷனர் அருணாசலம் செய்து வருகின்றனர். மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணத்தையொட்டி மதுரை விழாக்கோலம் பூண்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement