Advertisement

திருச்சி SRM மருத்துவ கல்லுாரியில் அறிவியல் கண்காட்சி துவக்கம்

திருச்சி இருங்களூரில் எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சி துவக்க விழா நடைபெற்றது. SRM TRP பொறியியல் கல்லூரி முதல்வர் கணேஷ்பாபு வரவேற்றார். SRM திருச்சி மற்றும் ராமாபுரம் வளாகங்களின் தலைவர் டாக்டர் சிவக்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் நசைன் பங்கேற்றார். இதில் 3,500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். SRM கல்வி குழுமத்தைச் சேர்ந்த மாணவர்களின் 232 அறிவியல் கண்டுபிடிப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றன. நிகழ்ச்சியில் துணைத் தலைவர் நிரஞ்சன், வளாக முதன்மை இயக்குனர் சேதுராமன், இயக்குனர் மால்முருகன், டீன் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டனர். இக்கண்காட்சி நாளை நிறைவடைகிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement