Advertisement

நகைக்காக மூதாட்டி கொலை... 2 நாளில் கொலையாளி கைது

நகைக்காக மூதாட்டி கொலை 2 நாளில் கொலையாளி கைது சென்னை ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரை சேர்ந்தவர் சிவகாமசுந்தரி வயது 81. மகன் ஸ்ரீராம், மருமகள் பானு இருவரும் வேலைக்கு செல்வதால் பெரும்பாலும் வீட்டில் தனியாகத்தான் இருப்பார். கடந்த 21ம் தேதி வேலை முடிந்து ஸ்ரீராம் வீட்டுக்கு வந்தபோது, சிவகாமசுந்தரி மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் சடலமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 6 சவரன் செயின், வளையல்கள் மாயமாகி இருந்தன. பெட்ரூமில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு 39 சவரன் நகைகள், இரண்டரை லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மூதாட்டி வீட்டை ச்சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆராய்ந்தனர். சென்னை கே.கே நகர், பாரதிதாசன் காலனியை சேர்ந்த 45 வயது சக்திவேல் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித் திரிந்தது தெரிய வந்தது. உதயம் தியேட்டர் முன் நின்றிருந்தவரை போலீசார் கைது செய்தனர். உரிய முறையில் விசாரித்தனர். தண்ணீர் கேட்பது போல் சிவகாமசுந்தரி வீட்டுக்குள் நுழைந்து, தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்துவிட்டு, நகைகளை கொள்ளையடித்து சென்றதாக வாக்குமூலம் அளித்தார். 45 சவரன் நகைகள், 1 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement