Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு வஸ்திர மரியாதை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிருந்து ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின்போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடக்கும். அதன்படி இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கும், உற்சவர் நம்பெருமாளுக்கும் பட்டு வஸ்திரங்கள் மற்றும் ரங்கநாயகி தாயாருக்கும், நாச்சியார்களுக்கு பட்டு புடவைகள் மாலை மற்றும் மங்களப் பொருட்கள் கொண்டு வந்தனர். இதனை ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் நிர்வாகிகள் எடுத்து வந்து ஸ்ரீரங்கம் கோயில் பட்டாச்சாரியார்களிடம் ஒப்படைத்தனர். நாளை நடைபெறும் சித்திரை தேரோட்டத்தின்போது இந்த வஸ்திரங்களை நம்பெருமாளுக்கும், தாயாருக்கும் அணிவிக்கப்படும் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement