Advertisement

கல்லூரி வேன் லாரி மோதல் மாணவிகள் 13 பேர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் தனியார் கல்லூரி மாணவிகள் கன்னியாகுமரிக்கு கல்லூரி வாகனத்தில் சுற்றுலா சென்று நேற்று இரவு திரும்பினர். வாகனத்தை டிரைவர் முனுசாமி ஓட்டினார். திருநெல்வேலி நான்கு வழி சாலையில் டீசல் இல்லாமல் ரோட்டின் ஓரத்தில் நின்ற லாரியின் பின்புறம் கல்லூரி வாகனம் மோதியது. இதில் டிரைவர் முனுசாமி, கிளீனர் வீர செல்வம், மாணவிகள் அன்னை தெரசா, ரஞ்சிதா, சசிகலா, பொன்மலர், சாந்தி உட்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். போக்குவரத்து போலீசார் திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு காயம் அடைந்தவர்களை அனுப்பி வைத்தனர். மாநகர போலீசார் விசாரிக்கின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement