Advertisement

வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுத்து கொலை

கோவை மாவட்டம் கரைப்பாளையம் புதுரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (54). இவரது மனைவி தங்கமணி. வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் இவர்கள் தனியாக வசிக்கின்றனர். நேற்று சுப்பிரமணி சொந்த வேலையாக வெளியே சென்று விட்டு வீடு திரும்பினார். வீட்டின் சமையலறையில் கழுத்து அறுபட்ட நிலையில் தங்கமணி இறந்த நிலையில் கிடந்தார். சுப்பிரமணியனின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அன்னூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். போலீசார், தடயங்களை சேகரித்தனர். கொலையாளிகள் தடயத்தை மறைக்க உடலை சுற்றிலும் மிளகாய் பொடி தூவியது தெரிய வந்தது. கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் குறித்து போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement