Advertisement

கொலையா? போலீஸ் விசாரணை

கும்பகோணம் அருகே பண்டாரவாடை கரைமேட்டு தெருவை சேர்ந்தவர் செல்வமணி வயது 55. கணவர் சீனிவாசன் இறந்துவிட்டார். பிள்ளைகளுக்கு திருமணமாகி வேறு வீட்டில் உள்ளனர். செல்வமணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சொன்னார். 5 நாட்களாக எந்தத் தொடர்பும் இல்லாததால் காணவில்லை என செல்வமணியை உறவினர்கள் தேடினர். செல்வமணி வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதை கண்டு, பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அண்டா ஒன்றில் உடல் திணிக்கப்பட்டு, அழுகிய நிலையில் செல்வமணி உடல் இருந்தது. எஸ்.பி ஆசிஷ் ராவத் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வமணி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement