Advertisement

ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் பெண்கள் 'தள்ளு முள்ளு'

சிவகங்கை திமுக சார்பில் ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டனர். கூட்டம் கூட்டுவதற்காக பெண்களுக்கு இலவசமாக சில்வர் பாத்திரம் தருவதாக ஆயிரம் பேரை அழைத்து வந்தனர். அதற்கு டோக்கனும் வழங்கினர். மாலை 6 மணியிலிருந்து மேடைக்கு அருகில் அமைக்கப்பட்ட பேரி கார்டுக்குள் அடைக்கப்பட்டனர். பல பெண்கள் குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு கூட்டத்தில் சிக்கி மயக்கமடையும் நிலைக்குச் சென்றனர். கடைசியில் பெண்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என இலவசத்தை வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement