Advertisement

உறுப்பு தானம் அதிகரிப்பு பிரதமர் மோடி பெருமிதம்! | Maan Ki Baat | Modi SPeech

மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். இந்தியாவில் உடல் உறுப்பு தானம் அதிகரித்துள்ளது. 2013ல் 5 ஆயிரமாக இருந்த உறுப்பு தானம், 2022ல் 15 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது. உடல் உறுப்பை தானம் செய்ய முன் வருபவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். மக்கள் அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும். சுரேகா யாதவ் வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஊட்டியை சேர்ந்த கார்த்திகி தயாரித்த குறும்படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. நாகாலாந்தில் முதல் முறையாக 2 பெண்கள் எம்எல்ஏ ஆகி உள்ளனர். ஒருவர் அமைச்சராகவும் பதவி ஏற்றுள்ளார். நாட்டின் கனவுகளை நிறைவேற்ற புதிய சக்தியை பெண்கள் தருகின்றனர். தமிழகம் மற்றும் காசி இடையேயான பழமையான உறவை காசி தமிழ் சங்கமம் கொண்டாடி வருகிறது. ஏப்ரல் 17 டூ 30 வரை குஜராத்தின் பல இடங்களில் சவுராஷ்டிரா - தமிழ் சங்கமம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். ----

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement