Advertisement

ஓய்வு பெற்ற ஆபீசர் வீட்டில் 120 பவுன் நகை ₹3.50 லட்சம் அபேஸ்

நீடாமங்கலம் அருகே ஆதனூர் மண்டபம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் குருமூர்த்தி. தஞ்சாவூர் கோர்ட்டில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மூன்று நாட்களுக்கு முன்பு குருமூர்த்தி உடல் நிலை பாதித்தது. வீட்டை பூட்டிவிட்டு மனைவி கலைச்செல்வியுடன் தஞ்சாவூரில் இருக்கும் மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய குருமூர்த்தி-கலைச்செல்வி தம்பதி வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்து கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பீரோவில் இருந்த 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், 120 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. நீடாமங்கலம் போலீசார் தடயங்களை சேகரித்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement