Advertisement

TNPSC நில அளவையர் தேர்வில் ஒரே மையத்தில் 700 பேர் பாஸ் - விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு

1,338 நில அளவையர், வரைவாளர் பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது. 29,882 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. கவுன்சிலிங் முடிந்து இறுதி பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேர்வு எழுதிய 700க்கும் மேற்பட்டோர் தேர்வாகி உள்ளனர். தேர்ச்சி பெற்ற பதிவெண்கள் ஒரே தேர்வு மையத்தை சேர்ந்தவை. வரிசையாக ஒருவருக்கு பின் ஒருவர் தேர்வாகி உள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலானவர்கள் அங்குள்ள பயிற்சி மையத்தில் படித்தவர்கள். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement