Advertisement

கஞ்சா வாலிபர் கொலை இருவர் கைது

தஞ்சை கரந்தை ராஜாராம் மடத் தெருவை சேர்ந்தவர் பிரதீப் வயது23. கஞ்சா விற்று வந்தார். சனிக்கிழமை இரவு பிரதீப் வீட்டுக்கு வந்த மூன்று மர்ம நபர்கள் கஞ்சா கேட்டனர். தன்னிடம் கஞ்சா இல்லை என்று பிரதீப் சொன்னதால் தகராறு செய்து கைகலப்பில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரதீப்பை சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் பிரதீப் அங்கேயே இறந்தார். போலீசார் தஞ்சையை சேர்ந்த சிவக்குமார், விக்னேஷை கைது செய்தனர். தப்பியோடிய சூர்யாவை தேடி வருகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement