Advertisement

மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை 14 மணி நேரத்தில் மீட்பு

திருப்பூர் செரங்காட்டைசேர்ந்தவர் கோபி (30). இவரது மனைவி சத்யா (28). சத்யாவுக்கு 18-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. கோபி அவரை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். 19-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. .சத்யாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேறு வார்டுக்கு மாற்றினர். அப்போது அருகில் இருந்த பெண், சத்யாவின் குழந்தையை கடத்தி சென்றார். திருப்பூர் விசாரணை மேற்கொண்டு சிசிடிவி காட்சிஉதவியுடன் குழந்தையை கடத்திய பெண்ணை தேடினர். இந்நிலையில் இன்று காலை திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த குழந்தையை மீட்டனர். திருமணமாகி 15 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தை இல்லாததால், பாண்டியம்மாள் குழந்தையை கடத்தியது தெரிந்தது. பிறந்து 7 நாளே ஆன ஆண் குழந்தையை 14 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசாரை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement