Advertisement

பிரசாந்த் கிஷோர் கொடுத்த அட்வைஸ்

2024 லோக்சபா தேர்தலிலும் பாஜகவை யாராலும் தோற்கடிக்க முடியாது என தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். இவர் 2021 தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு வியூகம் அமைத்து கொடுத்தவர். அடுத்த ஆண்டு வரும் லோக்சபா தேர்தல் பற்றிய தனது கணிப்பை வெளியிட்டார். "2024 லோக்சபா தேர்தலில் எதிர்கட்சிகள் ஓரணியில் திரள்வது கடினம். இந்துத்துவா, தேசியவாதம், வளர்ச்சி திட்டங்கள் ஆகிய 3 கொள்கைகளின் அடிப்படையில் பாஜக முன்னேறுகிறது. அந்த மூன்றில் இரண்டையாவது எதிர்கொள்ளும் வகையில் எதிர்கட்சிகளிடம் கொள்கையோ திட்டமோ இருந்தால் ஒரு டஃப் கொடுத்து பார்க்கலாம். அது யாரிடமும் இல்லை" என்கிறார் கிஷோர். "எதிர்க்கட்சிகள் கொள்கை ரீதியாக பிளவுபட்டுள்ளன. அவர்கள் ஒருவரை ஒருவர் எதிர்க்கும் நிலையில் இருப்பதால், பாஜகவை அவர்களால் தோற்கடிக்கவே முடியாது" என்றார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement