Advertisement

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தேனி விமானி மரணம்

அருணாச்சல பிரதேசத்தின் சங்கே கிராமத்தில் இருந்து, அசாமின் சோனிட்பூருக்கு இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் சென்றது. விமானிகள் லெப்டின்ட் கர்னல் VVBரெட்டி, மேஜர் ஜெயந்த் ஆகியோர் பயணித்தனர். பறக்க தொடங்கிய 15 நிமிடத்தில் கட்டுப்பட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. அருணாச்சலின் மண்டலா மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இரண்டு பைலட்களும் மரணம் அடைந்தனர். இறந்த மேஜர் ஜெயந்த் தேனியை ஜெயமங்களத்தை சேர்ந்தவர். மனைவி சாரா. குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். 10 வருடங்களுக்கு மேலாக ராணுவத்தில் பைலட்டாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஜெயந்த் உடல் விமானம் மூலம் தமிழகம் எடுத்து வரப்படுகிறது. சொந்த ஊரான ஜெயமங்களத்தில் ராணுவ மரியாதையுடம் இறுதி சடங்கு நடக்கிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement