Advertisement

+2 மாணவர்களுக்கு கவர்னர், முதல்வர் வாழ்த்து...

புதுச்சேரியில் பிளஸ் -2 தேர்வு இன்று தொடங்கி அடுத்த மாதம் ஏப்ரல் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. புதுச்சேரியில் பிளஸ் -2 தேர்வை 12 ஆயிரத்து 332 மாணவர்களும், காரைக்காலில் 2 ஆயிரத்து 359 மாணவர்கள் என மொத்தம் 14,691 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். 43 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பயமின்றி தேர்வை எழுதி வெற்றி பெறுங்கள் என மாணவர்களை தமிழிசையும் அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும்என முதல்வர் ரங்கசாமியும் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். மாணவ மாணவிகள் தேர்வு எழுத ஆர்வமுடன் பள்ளிக்கு வந்து, கடைசி நேர தயாரிப்பில் ஈடுபட்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement