Advertisement

திருச்சி ஏர்போர்ட்டில் 178 பயணிகள் பரிதவிப்பு

கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானம் நேற்றிரவு 12 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. திருச்சியில் இருந்து மீண்டும் நள்ளிரவு 1:10 மணிக்கு புறப்பட்டு கோலாலம்பூர் செல்ல வேண்டும். ஆனால் புறப்படவில்லை. இதுபற்றி விமானியிடம் பயணிகள் கேட்டனர். திருச்சியில் தரையிறங்கியபோது பறவை மோதியதால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், அதை சரி செய்யும் பணி நடப்பதால் விமானம் புறப்பட தாமதமாகலாம் என பதிலளித்தார். 14 மணி நேரம் கடந்த பிறகும் விமானம் புறப்படவில்லை. கோலாலம்பூர் செல்லும் 178 பயணிகள் பரிதவித்து வருகின்றனர். விமானம் விரைவில் புறப்படும் என திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி பயணிகளிடம் கூறினார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement