Advertisement

கலவரத்தில் முடிந்த எருதாட்டம் கல்வீச்சில் 15 போலீசார் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கோப்பசந்திரம் பகுதியில் தொட்டி தட்சிண திருப்பதி கோயில் திருவிழாவையொட்டி எருதுவிடும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர். நூற்றுக்கணக்கான காளைகளை அழைத்து வந்தனர். போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை எனக்கூறி அனைவரையும் போலீசார் அப்புறப்படுத்தினர். கொதிப்படைந்த இளைஞர்கள் பெங்களூரு - ஓசூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் தடுத்ததால் அவர்கள் மீது கற்களை வீசி கலவரத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் மீதும் கற்களை வீசினர். இதில் 15 போலீசார், பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு காயம் ஏற்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement