Advertisement

வாசிப்புத்திறன் அதிகரிக்க ஏற்பாடு புத்தகங்கள் வழங்கிய கலெக்டர்

சிவகங்கை மாவட்டத்தில் மாணவர்களிடம் வாசிப்புத்திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் புத்தகங்களை வழங்க கலெக்டர் மதுசூதன ரெட்டி நடவடிக்கை எடுத்தார். இதன் முதற்கட்டமாக அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கு புத்தகம் வழங்கும் விழா கலெக்டர் தலைமையில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், RDO சுகிதா முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை சிவமணி வரவேற்றார். மாவட்ட, மாநில அளவில் நடந்த பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் புத்தகங்களை வழங்கினார். ஏற்பாடுகளை தாசில்தார் பாலகுரு செய்திருந்தார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement