Advertisement

₹100 கோடி நிலக்கரி மாயம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

2021ல் வடசென்னை, தூத்துக்குடி அனல்மின் நிலையங்களில் ₹100 கோடி மதிப்பிலான நிலக்கரி மாயமனதாக புகார் எழுந்தது. அமைச்சர் செந்தில்பாலாஜி, மின்வாரிய உயரதிகாரிகள் ஆய்வு செய்து, நிலக்கரி மயமானதை உறுதி செய்தனர். விசாரணை நடத்த, மின் வாரிய இயக்குநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. நிலக்கரி மாயமானதை உறுதி செய்து, அந்த குழு அரசுக்கு அறிக்கையும் அளித்தது. நிலக்கரி மாயமானதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் தெரிவித்தது. ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை, ஒரு சிலரை காப்பற்றவே நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக மின் ஊழியர்கள் சொல்கிறார்கள்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement