Advertisement

கருவேல மரங்கள் அகற்றும் பணி அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடக்கோரி, வைகோ உள்ளிட்டோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு மீண்டும் விசாரித்தது. சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதில், சில சிக்கல்கள் இருப்பதாக அரசு வக்கீல் எடுத்துரைத்தார். அரசு சாரா அமைப்புகள் முன்வரவில்லை; பல இடங்களில் இயந்திரங்களை எடுத்து செல்வதில் சிரமம் உள்ளது; பருவ மழை காரணமாகவும், இடையூறு ஏற்பட்டுள்ளதாக கூறினார். சீமைக் கருவேல மரங்களால் ஏற்படும் பாதிப்பு கருதி, குறிப்பிட்ட அவகாசத்துக்குள் அகற்றும்படி, பஞ்சாயத்துக்கு உத்தரவிடலாம் என, நீதிபதிகள் அறிவுறுத்தினர். சீமை கருவேல மரங்களை அகற்றியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இல்லையென்றால், அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். விசாரணை, பிப்ரவரி 14க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement