Advertisement

ரேஷனில் இலவசமாக சிறுதானியங்கள்?

தமிழக ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுகின்றன. கேழ்வரகு, கம்பு, போன்ற சிறுதானியங்கள் வழங்கவும் அரசு முடிவு செய்தது. சென்னை, கோவையில் சில ரேஷன் கடைகளில் இவற்றை விற்க, அரசு அனுமதி அளித்து உள்ளது. தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு கார்டுதாரர்களிடம், நல்ல வரவேற்பு உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. வரும் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. சிறுதானியங்களை மானிய விலையில் விற்கலாமா?, இலவசமாக வழங்கலாமா? என்பது குறித்தும், அரசு ஆலோசித்து வருகிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement