Advertisement

ரோட்டில் சிதறிய ஜல்லி கற்கள் போலீசார் அகற்றி சமூக சேவை

கரூர் திருக்காம்புலியூர் பைபாஸ் ரவுண்டானா வழியாக தினமும் பல ஆயிரம் வாகனங்கள் கோவை மற்றும் மதுரை மார்க்கமாக செல்கின்றன. ஜல்லி கற்களை ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகளில் இருந்து கீழே விழும் கற்கள் ரோடு முழுவதும் சிதறி கிடந்தது. இவ்வழியாக செல்லும் டூவீலர் மற்றும் வாகன ஓட்டிகள் ஸ்லிப் ஆகி அடிக்கடி கீழே விழுந்து காயமடைவது தொடர்ந்தது. இதையடுத்து கரூர் சிட்டி டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் புண்ணியமூர்த்தி தலைமையில் போலீசார் மற்றும் தன்னார்வல இளைஞர்களுடன் சேர்ந்து ரோட்டில் சிதறி கிடந்த ஜல்லி கற்களை துடைப்பத்தால் கூட்டி அகற்றினர். போலீசாரின் இந்த சமூக சேவைக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement