Advertisement

திருச்சி போலீசாருக்கு அதிகாரிகள் பாராட்டு

திருச்சி மாவட்டம் லால்குடி மங்கம்மாள்புரத்தை சேர்ந்த 33 வயது பெண் திருமணம் ஆகாமலே கர்ப்பம் ஆனார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை வளர்க்க மனமின்றி வக்கீல் பிரபு என்பவர் மூலம் விற்க முடிவு செய்தார். பிரபு அந்த குழந்தையை மூன்றரை லட்சத்துக்கு விற்று, தாய்க்கு 80 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் குழந்தையை காணவில்லை என ஐகோர்ட்டில் மனு செய்தார். விசாரணையில் குழந்தையை தாயே விற்றது தெரிய வந்தது. தாய், வக்கீல் பிரபு, அவரது 2வது மனைவி சண்முகவள்ளி, கார் டிரைவர் ஆகாஷ், குழந்தையை வாங்கி விற்ற புரோக்கர் கவிதா ஆகியோர் கைது செயயப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். புரோக்கர் கவிதாவிடம் நடத்திய விசாரணையில் அந்த குழந்தை டில்லியில் உள்ள மற்றொரு புரோக்கருக்கு கை மாறியது தெரிய வந்தது. குழந்தையை மீட்க தனிப்படை போலீசார் டில்லி சென்று 1 வாரம் முகாமிட்டனர். டில்லி புரோக்கர் கோபிநாத்தை கைது செய்து விசாரித்தனர். குழந்தையை கர்நாடகாவை சேர்ந்த பாக்கியஸ்ரீ என்ற பெண்ணுக்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. பாக்யஸ்ரீக்கு குழந்தை இல்லாததால் புரோக்கர் கோபியிடம் 5 லட்சத்துக்கு குழந்தையை வாங்கி உள்ளார். கர்நாடகா சென்ற போலீசார் குழந்தையை மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தை மற்றும் கைதான புரோக்கர் கோபியுடன் தனிப்படை போலீசார் திருச்சி திரும்பினர். கிட்டத்தட்ட 6 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து குழந்தையை மீட்ட தனிப்படை போலீசாரை உயரதிகாரிகள் பாராட்டினர். குழந்தை கோர்ட்டில் ஆஜர்படுத்த இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement