Advertisement

டைலர் வெட்டி கொலை மர்ம கும்பல் வெறி செயல்!

திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 55. திருவூடல் தெருவில் டைலர் கடை நடத்தி வந்தார். இரவு கடையிலிருந்து டூ வீலரில் வீட்டிற்கு சென்றார். அண்ணா நகர் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல், அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றது. ஆறுமுகம் பலத்த காயமடைந்து அதே இடத்தில் பலியானார். தகவலறிந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement