Advertisement

படியில் தொங்கி செல்வதில் தகராறு மாணவர்கள் மோதல் 9 பேர் மீது வழக்கு

ள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர்போலீஸ் எல்லைக்குட்பட்டது எடப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் 24ம் தேதி திருக்கோவிலூரில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற தனியார் பஸ்சில் , படிக்கட்டில் தொங்கிச் செல்வது தொடர்பாக எடப்பாளையம் மற்றும் எல்ராம்பட்டு கிராம மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டது. 25ஆம் தேதி காலை எடப்பாளையம் கிராம மாணவர்கள் 9 பேர் எல்ராம்பட்டை சேர்ந்த ராஜேஷ் மற்றும் விஜய் ஆகிய 2 மாணவர்களை சரமாரியாக தாக்கினர். திருக்கோவிலூர் போலீசார், ரகளையில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில் படிக்கட்டில் தொங்கியது தொடர்பாக இருதரப்பினருக்கும் முன்விரோதம் இருந்ததும், அதன் காரணமாக 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவன் உட்பட 9 பேர் எல்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் விஜய் ஆகிய இருவரையும் சரமரியாக தாக்கியது தெரிந்தது.. போலீசார் வழக்கு பதிவு செய்து 8 மாணவர்களை தேடி வருகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement