Advertisement

டயர் வெடித்ததால் வேன் கவிழ்ந்து விபத்து 20 பேர் படுகாயம்!

பெரம்பலூர் மாவட்டம் வாளிகண்டபுரத்தை சேர்ந்தவர் முஸ்தபா. கிருஷ்ணகிரி மாவட்டம் மாயனூரில் உள்ள தர்காவிற்கு பாடம் போடுவதற்காக உடல் நலமில்லாத 20 நபர்களை வேனில் அழைத்து சென்றார். பின்னர் அவர்களோடு சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக பெரம்பலூருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். கொத்தாம்பாடி என்ற இடத்தில் வந்தபோது வேனின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பயணம் செய்த 20 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த ஆத்தூர் போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement