Advertisement

ஆற்றில் மூழ்கி இருவர் பலி

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அண்ணாதுரை மகன் பாபு, 30: வ.கொளக்குடி ராமலிங்கம் மகன் உதயகுமார், 27. இவர்களது நண்பர்கள் கருப்பேரி திருமாறன், கார்த்திக் மற்றும் செந்தில்நாதன், மணி. இவர்கள் ஆறு பேரும் நேற்று கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது ஆற்றில் அதிக தண்ணீர் ஓடியது. ஆழம் அதிகம் உள்ள பகுதியில் இறங்கிய சற்று நேரத்தில் உதயகுமார், பாபு இருவரும் புதை மணலில் சிக்கி, தண்ணீரில் மூழ்கினர். அவர்களை நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. காட்டுமன்னார்கோவில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இருவரையும் சடலமாக மீட்டனர். காட்டுமன்னார்கோவில் போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை அனுப்பினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement