Advertisement

கொலு பொம்மைகள் செய்து அசத்திய பள்ளி சிறுவன்!

காஞ்சிபுரம் அடுத்த மாகறல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கவியரசு-லட்சுமி தம்பதி. இவர்களது மூத்த மகன் மதன் ஏழாம் வகுப்பு படிக்கிறான். கடந்த மூன்று ஆண்டுகளாக களிமண்ணால் தான் செய்த பொம்மைகளை நவராத்திரி கொலுவில் வைத்து வருகிறான். கடந்த 2020 கோவிட் ஊரடங்கில் வீட்டில் முடங்கி கிடந்த போது தன் தாத்தாவிடம் களிமண்ணால் பொம்மைகள் செய்ய கற்றுக் கொண்ட மதன், நவராத்திரி விழாவில் கொலு வைக்க முடிவு செய்தான். அதன்படி மூன்று ஆண்டுகளாக தான் செய்து வைத்திருந்த பொம்மைகளை வைத்து நவராத்திரி விழா கொண்டாடி வருகிறான். இந்தாண்டு கொலுவில் வைத்த ஒன்பது படிகளிலும் பறவைகள், விலங்குகள், ஊர்வன, மனிதர்கள், சப்தரிஷிகள், சரஸ்வதி, லட்சுமி என பல்வேறு கடவுள் சிலைகள் செய்து வைத்துள்ளான். சிறுவயதிலேயே களிமண்ணால் பொம்மைகள் செய்து அசத்திய மதனை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement