Advertisement

குழந்தைக்கு தாயான சிறுமி வாலிபர் கைது!

வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அப்பகுதியில் உள்ள கடையில் வேலை செய்து வந்தார். ராமாபுரம் டி.எல்.எப்., வளாகத்தில் கேன்டீனில் வேலை செய்யும் அம்பூரூஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்தனர். இருவரும் நெருங்கி பழகியதால் சிறுமி கர்ப்பமானார். அம்பூரூஸிடம் கூறியபோது யாரிடமும் சொல்ல வேண்டாம் எனவும் திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து தனக்கு தொப்பை வந்துள்ளதாக அனைவரிடமும் கூறி சிறுமி கர்பத்தை மறைத்து வந்தார். சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தாயாருக்கு தெரிந்தது. அம்பூரூஸிடம் கேட்ட போது திருமணம் செய்ய முடியாது என மறுத்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 30 ம் தேதி சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. புகாரையடுத்து அம்புரூசை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement