Advertisement

அறிவாலயத்தில் பல்பு வாங்கிய பாஜ பிரமுகர்

மதுரை மாவட்ட பாஜ முன்னாள் தலைவர் சரவணன், திமுகவில் ஐக்கியம் ஆகிட்டார். அவரை தொடர்ந்து பலர் திமுகவுக்கு தாவுவார்கள் என சொல்லப்பட்டது . இந்த நேரத்தில் பாஜவில் மாநில பொறுப்பில் உள்ளவரை திமுகவில் சேர்க்க முயற்சி நடந்தது. சரவணன் பேச்சை கேட்டு , அருவம் அறிவாலயம் சென்றார். சரவணனே அங்கு தனி ஆளாக தான் இருந்தார். அவரை யாரும் கண்டுக்கவில்லை. இந்த நிலையை பார்த்ததும் மதுரை பாஜ பிரமுகர் ஷாக் ஆனார். வக்பு வாரிய பதவி கிடைக்கும் என நம்பி சென்றவர் ஏமாற்றத்துடன் ஊருக்கு திரும்பினார். அடுத்த நாளே பாஜ தேசிய தலைவர் நட்டாவை வரவேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அறிவாலயம் சென்றது பற்றி நிர்வாகிகள் கேட்ட போது, அந்த பக்கமே போகவில்லை என அடித்து பேசினார். ஆனால் அவர் சரவணனுடன் அவர் வலம் வந்த போட்டோக்களை பாஜவினர் வெளியிட்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement