Advertisement

ஊட்டச்சத்து விழிப்புணர்வு திருவிழா

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா ஹோலி குரோஸ் மெட்ரிக் பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு திருவிழா நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன் துவக்கி வைத்தார். பணியாளர் ஜெயராணி வரவேற்றார். குடற்புழு நீக்கம் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது குறித்து பயிற்சி அளித்தனர். மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை, ஊட்டச்சத்து நிறைந்த பலகாரங்களை வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் ரகுவரன், பள்ளி முதல்வர் ஜெயந்தி சாமிநாதன் வழங்கினர். அதே போல் நெல்லியாளம் அரசு துவக்கப் பள்ளியில் செவிலியர் தமிழரசி தலைமையில் குடற்புழு நீக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர். குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement