Advertisement

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் மேலும் 2 பேர் கைது

ள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. கலவரத்தில் பள்ளி பொருட்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டன. சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாக உலகியநல்லார் கிராமத்தைச் சேர்ந்த அன்பு மற்றும் போலீசார் வாகனம் மீது கல்வீசிய உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்த ராம்குமார் ஆகிய 2 பேரை போலீசார் வீடியோ ஆதாரங்களை கொண்டு கைது செய்தனர். இருவரையும் கள்ளக்குறிச்சி நீதிபதி முகமது அலி முன்பு ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக இதுவரை 357 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement