Advertisement

காரைக்குடி மக்களின் பாரம்பரிய மாட்டு வண்டி பயணம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கே. வேலங்குடி கிராமத்தினர் மதுரை அழகர்கோவிலில் ஆகஸ்ட் 12 ம் தேதி நடக்கும் தேரோட்ட விழாவில் கலந்து கொள்ள கடந்த ஆகஸ்ட் 7 ம் தேதி பாரம்பரிய முறைப்படி உறவினர்களுடன் இரட்டை மாட்டு வண்டிகளில் புறப்பட்டு அழகர்கோவிலுக்கு வந்தனர். அழகர்கோவிலில் முடி காணிக்கை செலுத்தி கிடா வெட்டி, பொங்கல் வைத்து வழிபட்டனர். அதைத் தொடர்ந்து நாளை நடக்கும் தேரோட்ட விழாவில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்த பின் சொந்த ஊருக்கு புறப்பட உள்ளனர். நுாற்றாண்டுக்கும் மேலாக பாரம்பரிய முறையில் மாட்டு வண்டிகளில் அழகர்கோவில் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக மலேசியா, சிங்கப்பூர், குவைத் உள்ளிட் வெளிநாடுகளில் வசிக்கும் கே. வேலங்குடி கிராம மக்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்வதை பெருமையாக கருதினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement